பாகிஸ்தான் ராவல்பிண்டி நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பங்குச்சந்தை கட்டடத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் ஜூன் 29ஆம் தேதி குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் நான்கு பயங்கரவாதிகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் இயங்கிவரும் விடுதலை ராணுவம் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் தலைமறைவாக இருப்பதாகத் தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இஸ்லாமாபாத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது மூன்று பயங்கரவாதிகள் சிக்கினார்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், பஞ்சாப் மாகாணத்தில் பங்குச்சந்தை மற்றும் தலைநகரில் உள்ள முக்கிய அரசு நிறுவனங்களைத் தாக்க சதித்திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்தது. நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க அவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.