அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருநானக் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரில் நேற்று (மே14) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் மருத்துவமனையில் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
மருத்துவமனையின் எக்ஸ்ரே எடுக்கும் பிரிவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அங்கிருந்த நோயாளிகள் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில் தீ விபத்து நடந்த மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் பகவந்த் மான், அங்கிருந்த நோயாளிகளிடம் ஆறுதல் கூறினார். அப்போது அவருடன் மின்சாரத்துறை அமைச்சர் ஹர்பஜன் சிங்கும் உடனிருந்தார்.
பஞ்சாப் மருத்துவமனையில் நிகழ்ந்த இந்தத் தீ விபத்து மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. எதிர்க்கட்சித் தலைவர்களும் தீ விபத்து தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
இந்தத் தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. விபத்து காரணமாக காயமுற்றவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.