ETV Bharat / bharat

திரிணாமுல் காங்கிரசில் இணைந்த டென்னிஸ் ஜாம்பவான் - பிரபல நடிகை நசிஃப் அலி

பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

Leander Paes
Leander Paes
author img

By

Published : Oct 29, 2021, 3:41 PM IST

கோவா மாநிலத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக பிரபல டெஸ்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

கோவாவில் நடைபெற்ற நிகழ்வில் அக்கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி முன்னிலையில் பயஸ் தன்னை கட்சியில் இணைத்துக்கொண்டார். பிரபல நடிகை நசிஃப் அலியும் திரிணாமுல் கட்சியில் இன்று இணைந்தார்.

கோவாவில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தி அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வளரும் முயற்சியில் முனைப்புக் காட்டிவருகின்றன.

அன்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர் லூயிசினோ ஃபெலோரா திரிணாமுலில் இணைந்தார். கோவா மட்டுமில்லாது திரிபுரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் காங்கிரஸ் தலைவர்களை திரிணாமுல் தன் பக்கம் இழுத்துவருகிறது.

இதையும் படிங்க: ஆர்பிஐ கவர்னர் சக்தி கந்த தாஸ் பதவிக்காலம் நீட்டிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.