புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் சேத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இரண்டு கோவில்களில் நேற்று (டிச. 11) இரவு அடையாளம் தெரியாத நபர்கள் கோயிலின் உள்ளே நுழைந்து அங்குள்ள உண்டியலில் பூட்டை உடைத்து சுமார் 50 ஆயிரம் ரூபாய் காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இன்று காலை கோவில் நிர்வாகிகள் இதனை அறிந்து, திருநள்ளார் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரை அடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் உள்ளூர் பகுதியை சேர்ந்தவர் இருவர் திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.