பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தின் போங்க் நகரில் உள்ள இந்து கோயிலை சுமார் 150 இஸ்லாமியர்கள் தாக்கியுள்ளனர். இதனையடுத்து கோயிலில் உள்ள சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கோயிலின் பிரதான வாயிலையும் இக்கும்பல் எரித்துள்ளது.
அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய பள்ளியில் உள்ள நூலகத்தில் எட்டு வயது இந்து சிறுவன் ஒருவன் சிறுவன் சிறுநீர் கழித்த நிலையில் இந்தப் பிரச்சினை சூடுபிடிக்கத் தொடங்கியது. பல ஆண்டுகளாக போங்க் பகுதியில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் நிலையில் இந்தப் பிரச்சினையால் இருதரப்பிலும் பதற்றம் நிலவுகிறது.
இந்து கோயிலை தாக்கிய இஸ்லாமியர்களில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இனி வெளிநாட்டவருக்கும் தடுப்பூசி - மத்திய சுகாதாரத் துறை