ஹைதராபாத் : தெலங்கானாவின் வாராங்கல்லில் உள்ள ராமப்பா கோயில் காகத்திய வம்சத்தை சேர்ந்த கணபதி தேவாவின் (Ganapati Deva) படைத்தளபதி ரெச்சார்லா ருத்ர ரெட்டி (Recharla Rudra Reddy) 1213ஆம் ஆண்டு கட்டினார்.
இந்தக் கோயில் முலுகு (Mulugu) மாவட்டத்தில் உள்ள பாலம்பேட் (Palampet) கிராமத்தில் அமைந்துள்ளது. காகத்திய கட்டடக் கலையின் அம்சமான இக்கோயில் யூனெஸ்கோவால் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) அங்கீகரிக்கப்பட்டது.
இது அவ்வளவு எளிதாக நடைபெறவில்லை, ரஷ்யா உதவியது. முன்னதாக இக்கோயில் 2019ஆம் ஆண்டு யூனெஸ்கோ பட்டியலில் அங்கீகரிக்க பரிந்துரைக்கப்பட்டது. இறுதியாக நாட்டின் 39ஆவது உலக பாரம்பரிய சின்னமாக யூனெஸ்கோ ராமப்பா கோயிலை அங்கீகரித்துள்ளது.
கோயிலின் சிறப்பம்சங்கள்
மிதக்கும் கற்கள் : கோயில் மிதக்கும் செங்கற்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளன. கோயிலின் மேற்கூரையில் மிதக்கும் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கோயில் செம்மண் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
தொழிற்நுட்பம் : பூமி அதிர்ச்சி, போர், இயற்கை அழிவுகளை எதிர்கொள்ளும் வகையில் Sandbox technique உபயோகிக்கப்பட்டுள்ளது.
கறுப்பு பசால்ட் : கோயிலுக்குள்ள சிக்கலான கட்டமைப்புகளில் கறுப்பு பசால்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தலைவர்கள் வாழ்த்து
இந்தக் கோயிலுக்கு யூனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்துள்ளது தொடர்பாக துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில், “காகத்தியாவின் ருத்ரேஸ்வரர் கோயிலுக்கு உலக அங்கீகாரம் கிடைத்துள்ளது நமக்கு பெருமை. தெலங்கானா மக்களுக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, “ராமப்பா கோயில் காகத்திய வம்சத்தின் சிறப்பான கட்டடக் கலையின் எடுத்துக்காட்டு. இந்தக் கம்பீர கட்டுமானத்தையும், கோயிலின் அழகையும் காண அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் மாநில முதலமைச்சர் கே.சந்திர சேகர் ராவ்வும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ராமப்பா கோயிலுக்கு யூனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : ராமப்பா கோயில், யூனெஸ்கோ அங்கீகாரம்!