கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே, தெலங்கானா மாநிலத்தில் வாழ்ந்துவரும் தமிழர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளின் நலன் காக்கும் விதமாக தெலங்கானா தமிழ்ச் சங்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. இதன் ஒரு பகுதியாக மத்திய ஆயூஷ் அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சித்த மருந்தான கபசுர குடிநீர் பொடி மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்துவரும் தமிழர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் துணை தலைவர் ஏ.கே.போஸ், தர்மசீலன், பொருளாளர் நேரு, துணைப் பொதுச்செயலாளர் ராஜ்குமார், யுவராஜ், குணசேகர் மற்றும் செய்ற்குழு உறுப்பினர்கள் செய்தனர்.
ஏற்கனவே தமிழர் பாரம்பரிய மருத்துவம் - கரோனா தொற்று தடுக்கும் முறைகள் குறித்து இணையவழி கருத்தரங்கம் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டது. இதில் பிரபல சித்த மருத்துவர் கு. சிவராமன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அத்துடன் தெலங்கானா தமிழ் சங்கத்தின் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
தற்போது கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தெலங்கானா பகுதியில் வசித்து வரும் தமிழர்களுக்கு இலவச தடுப்பூசி முகாம் மற்றும் முழு உடல் பரிசோதனை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தெலங்கானா தமிழ் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.