ETV Bharat / bharat

கரோனா அச்சம்: தெலங்கானவில் பட்டாசு விற்பனைக்கு தடை - தெலங்கானா உயர் நீதிமன்றம்

ஹைதராபாத்: கரோனா பரவல் அச்சம் காரணமாக பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Telangana high court bans sale of crackers
தெலங்கானாவில் பட்டாசு விற்பனைக்கு தடை
author img

By

Published : Nov 13, 2020, 8:49 AM IST

இதுதொடர்பாக மூத்த சட்ட ஆலோசகர் மச்சர்லா ரங்கய்யா கூறியதாவது:

மாநிலத்தில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி சந்திர பிராகாஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்றம் மூன்று வழிகாட்டுதல்களை அரசுக்கு வழங்கியுள்ளது. அதன்படி, மாநிலத்தில் பட்டாசு விற்பனையை தடை செய்ய வேண்டும், பொதுமக்கள் பட்டாசுகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும், கரோனா பரவலை கருத்தில் கொண்டு அரசு தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், இதுதொடர்பாக நவம்பர் 19ஆம் தேதி தெலங்கானா அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முன்னதாக, கரோனா வைரஸ் தொற்று பரவல் இருக்கும் நிலையில், தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்க கோரி, சந்திர பிரகாஷ் என்பவர் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று (நவ.12) விசாரணைக்கு வந்த நிலையில், கரோனா அச்சம் காரணமாக மாநிலத்தில் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிங்க: தள்ளுபடி விலையில் ரயில் டிக்கெட்: பயணிகளை ஈர்க்கும் ரயில்வே வாரியம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.