ஹைதராபாத்(தெலங்கானா): கரோனா 2ஆவது அலையில் தொற்றுப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டைப்போல தெலங்கானா மாநில அரசும் பன்னிரெண்டாம் வகுப்பு மாநிலப்பாடத்திட்டத்திற்கான தேர்வை ரத்து செய்து அறிவித்துள்ளது.
இதுகுறித்தான அறிவிப்பினை தெலங்கானா மாநில இடைநிலைப்பருவ வாரியம் அறிவித்த நிலையில், மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண்கள் வழங்கலாம் என ஆலோசனை செய்து வருகிறது.
முன்னதாக ஒன்றிய அரசு, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வினை ரத்து செய்ததற்குப் பின், இந்த அறிவிப்பினை தெலங்கானா அரசு வெளியிட்டுள்ளது. இதனை அம்மாநில கல்வி அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி அறிவித்துள்ளார்.
முன்னதாக கரோனா பரவும் சூழலைக் கருத்தில் கொண்டு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளை தமிழ்நாடு, உத்தரகாண்ட், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டைப் போலவே, சில மாணவர்கள் தேர்வுகளை எழுத விரும்பினால், அத்தகைய விருப்பம் உள்ளவர்களுக்கு சிபிஎஸ்இ வாய்ப்பு வழங்கும் என்றும் தெரிவித்தது. ஆனால், நிலைமை தற்போது உகந்ததாக இல்லை. இதனால் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி, 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்தது.
இதையும் படிங்க: கோவேக்ஸின் மூன்றாம் தவணை பரிசோதனை முடிவுகள் ஜுலையில் வெளியீடு - பாரத் பயோடெக்