கடந்த 10 மாதங்களுக்குப் பிறகு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ளார்.
அவர் சென்னை வந்து இறங்கியவுடன், தான் வழக்கமாக வழிபடும் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை வழிப்பட்டார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை வந்ததும் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கு வந்து வணங்கினேன்.
கரோனா நோய்த் தொற்றிலிருந்து நாடு முழுவதும் விடுபட வேண்டும். மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக வாழவேண்டும் என இறைவனை பிரார்த்தித்தேன்”எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து ஆளுநர் தமிழிசை மரியாதை செலுத்தினார்.
இது குறித்து ஆளுநர் தமிழிசை, ”சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு உயர தன் வாழ்க்கையை அர்பணித்தவர். நம் ஜனநாயகத்திற்கு பெருமை சேர்க்க கூடிய அரசியலமைப்பு சட்டம் உருவாக காரணமாக இருந்தவர். அவருக்கு மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறேன்” என்றார்.