தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.
மொத்தமுள்ள 150 இடங்களில் அக்கட்சி இரு இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. இந்தப் படுதோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து உத்தம் குமார் ரெட்டி ராஜினாமா செய்துள்ளார்.
இந்தத் தேர்தலில் 56 இடங்களுடன் ஆளுங்கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி (டிஆர்எஸ்) முதலிடத்திலும், 49 இடங்களுடன் பாஜக இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன.
எனினும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜகவின் வெற்றி குறித்து உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி கூறுகையில், “மக்கள் டிஆர்எஸ், அசாதுதீன் ஓவைசியை நிராகரித்துள்ளனர்.
பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். மாநிலத்தில் பாஜக வலிமையான கட்சியாக மாறியுள்ளது” என்றார். இத்தேர்தலில் அசாதுதீன் ஓவைசியின் கட்சி 42 இடங்களை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல்: அடித்து துவம்சம்செய்த பாஜக!