தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இன்று சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இடது கையில் சற்று வலி இருப்பதாக அவர் கூறியதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு, ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட அனைத்துவிதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கே.சி.ஆர் மருத்துவப்பரிசோதனை செய்துகொண்டார்.
இதன்காரணமாக அலுவல் ரீதியான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் செய்தியாளர்களிடம், 'இது வழக்கமான பரிசோதனை தான். எனவே, கட்சியினரும், மக்களும் கவலைகொள்ளத் தேவையில்லை' எனக் கூறினர்.
"கே.சி.ஆரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. இரண்டு நாள்களாக அவர் உடல்நிலை சரியில்லாமல் சோர்வாக இருந்துள்ளார். குறிப்பாக, அவரது இடது கையில் வலி இருந்துள்ளது.
முதற்கட்டமாக அவருக்கு ஆஞ்சியோகிராம் மற்றும் சி.டி. ஸ்கேன் செய்துள்ளோம். முதலமைச்சருக்கு அனைத்து வகையான பரிசோதனையும் செய்யவுள்ளோம். இது வழக்கமாக பரிசோதனைதான்'' என கே.சி.ஆரின் மருத்துவர் டாக்டர் எம்.வி.ராவ் தெரிவித்தார்.
இதையும் படிங்க : புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க paytm-ற்குத் தடை