ETV Bharat / bharat

பாகிஸ்தான் ஆதரவாளர்களை விரட்டியடிக்க துல்லிய தாக்குதல் - பாஜக தலைவர் கருத்தால் சர்ச்சை - ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்

ஹைதராபாத் மாநகராட்சி மேயராக பாஜக வேட்பாளர் வெற்றிப்பெற்றால், பாகிஸ்தான் ஆதரவாளர்கள், ரோஹிங்கியாக்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்படும் என தெலங்கானா மாநில பாஜக தலைவர் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா பாஜக தலைவர்
தெலங்கானா பாஜக தலைவர்
author img

By

Published : Nov 25, 2020, 11:10 AM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி, அம்மாநில பாஜக தலைவர் பந்தி சஞ்சய் குமார் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அந்நகரின் ஹப்சிகுடா பகுதியில் பரப்புரையின்போது, பாஜக வேட்பாளர் ஹைதராபாத் மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நகரில் உள்ள பாகிஸ்தான் ஆதரவாளர்கள், ரோஹிங்யா இஸ்லாமியர்களை விரட்டியடிக்க துல்லிய தாக்குதல் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

அவருடைய இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பேசிய அவர், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி, அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் ஆகிய கட்சியினர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ரோஹிங்கியாக்களின் ஆதரவாளர்களின் வாக்குகளைப் பெற்று ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் வெற்றிப்பெற முயற்சிக்கிறார்கள் எனவும் குற்றஞ்சாட்டினார்.

இதையடுத்து, தெலங்கானா அமைச்சரும், டிஆர்எஸ் கட்சி செயற்குழுத் தலைவருமான கே.டி.ராமாராவ், பந்தி சஞ்சய் குமாரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த கண்டனத்தில், " ஹைதராபாத் மீது துல்லிய தாக்குதலா? வாக்குகளுக்காகவும், பதவிக்காகவும் பாஜக தலைவருக்கு பித்து பிடித்துவிட்டதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் ஓவைசியால் பாதுகாக்கப்பட்டு வரும் ரோஹிங்கியாக்கள் வெளியேற்றப்படுவார்கள் என பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதையும் படிங்க: 'ஒரு நாள் கூட சிறை தண்டனை அனுபவிக்கவில்லை'- லாலு பிரசாத்துக்கு பிணை வழங்க சிபிஐ எதிர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.