ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் மகபூபாபாத்தில் லாரியில் இருந்து கிரானைட் கற்கள் ஆட்டோ மீது விழுந்ததில் ஓட்டுநர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதுகுறித்து மகபூபாபாத் போலீசார் கூறுகையில், முகோரிகுடம் கிராமத்தை சேர்ந்த 8 பேர் புத்தாண்டை கொண்டாட குரவி கிராமத்துக்கு ஆட்டோவில் புறப்பட்டுள்ளனர்.
இந்த ஆட்டோ குரவி அருகே சென்றுகொண்டிருந்தபோது பின்னே வந்துகொண்டிருந்த லாரி முந்தி செல்ல முற்பட்டது. அந்த நேரத்தில், லாரியில் இருந்த கிரானைட் கற்கள் மலமலவென சரிந்து ஆட்டோ மீது விழுந்தன. இதனால் ஆட்டோ நசுங்கியது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். மீதமுள்ள 6 பேரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர்கள் ஆட்டோ ஓட்டுநர் பானோத்து சுமன் (35). பயணிகள் ஒய் ஸ்ரீகாந்த் (30), டி நவீன் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 பேரின் உடல் நிலை சீராக உள்ளது. லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடந்துவருகிறது எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் - பொதுமக்களில் 4 பேர் உயிரிழப்பு