பிகார் மாநில எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்டிரிய ஜனதாதள கட்சித் தலைவருமான லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி பாட்னாவில் உள்ள தனது அரசு இல்லத்தை கோவிட்-19 சிகிச்சை மையமாக மாற்றியுள்ளார்.
அங்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், படுக்கைகள், ஆக்ஸிஜன், உணவு உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்துள்ளார். இதுகுறித்து அவர், 'மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு இல்லங்களையும் கோவிட்-19 மையமாக மாற்ற அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். பல இடங்களில் படுக்கை, ஆக்ஸிஜன் உள்ளிட்டவை தட்டுப்பாடாக உள்ளது.
ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இந்த நடவடிக்கையை நான் மேற்கொண்டுள்ளேன். எனவே, மாநில அரசு இதை ஏற்றுக்கொண்டு, இந்த முன்னெடுப்பைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக முதலமைச்சர் நிதீஷ் குமாருக்கு எழுதிய கடிதத்திற்கு இதுவரை பதில் வரவில்லை' என்றுள்ளார்.
பிகார் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 6,286 பாதிப்புகளும், 111 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
இதையும் படிங்க: கேரள அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் மறுப்பு: பின்னணி என்ன?