குஜராத்: ராஜ்கோட் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர், நிகுஞ்ச் வகாடியா. இவர் உலகில் அதிக அளவிலான மினியேச்சர் புத்தகங்களை உருவாக்கி கின்னஸ் சாதனைப் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி கடந்த 2006ம் ஆண்டு லிம்கா புக் ஆஃப் ரெகார்ட்ஸிலும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு இளமைக் காலத்தில் இருந்தே அரிசியில் எழுதும் ஆர்வம் இருந்ததால் சிறிய வடிவுலான புத்தகங்களை எழுதுவதற்கு ஆர்வம் பெற்றுள்ளார். ராமாயணம், மகாபாரதம், குரான், ஏசு கிறிஸ்து போன்ற மத புத்தகங்களை சிறிய அளவில் எழுதி வெளியிட்டுள்ளார். அது மட்டுமின்றி சர் ஆல்ஃபிரட் நோபல் போன்ற பல தலைமைகள் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு, ஷேக்ஸ்பியர் நாடகங்களான மக்பத் மற்றும் ஓதெல்லோ ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.
சிட்னி ஷெல்டனின் நாவல்கள், அரேபிய இரவுகள் மற்றும் பெட் டைம் டேல்ஸ் போன்ற பிற படைப்புகளையும் கையால் எழுதப்பட்டு சிறு பதிப்புகளாக வெளியிட்டுள்ளார். இந்நிலையில் “ஹனுமன் சாலிசா” எனும் மந்திர புத்தகத்தை சிறிய அளவில் உருவாக்கியுள்ளார். இப்புத்தகம் ஹனுமனின் அருளைப் பெற்ற துளசிதாசர் வடமொழியில் சாலிசா என்று எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெல்லியில் மத்திய அரசுக்கு உரிமை! மாநில அந்தஸ்துக்கு நேரு எதிர்ப்பு... அமித் ஷா காரசார விவாதம்!
இதுகுறித்து நிகுஞ்ச் வகாடியா அளித்த பேட்டியில் கூறியதாவது, “ என்னுடைய பேர் உலக கின்னஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றுள்ளது. நான் தான் உலகிலேயே மிக அதிகமான சிறிய அளவிலான புத்தகங்களை எழுதியுள்ளேன். இதுவரையில் 750 மினியேச்சர் புத்தகங்களை எழுதி வெளியிட்டு உள்ளேன். ராமாயணம், மகா பாரதம், பகவத் கீதா போன்ற அனைத்து மத புத்தகங்களை எழுதியுள்ளேன்” என்றார்.
மேலும் பேசிய அவர், “ ஹனுமன் சாலிசா என்னும் புத்தகத்தை நான் மினியேச்சராக எழுதியுள்ளேன். இது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்கவிருக்கும் அயோத்தி ராமர் கோயிலின் மகா கும்பாபிஷேக விழாவிற்காக உருவாக்கியுள்ளேன்” என்று குறிப்பிட்டார். இவர் எழுதி உள்ள இப்புத்தகம் 700 மில்லிகிராம் எடையிலும் மற்றும் 30x5 மில்லி மீட்டர் என்ற அளவிலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேச மாநில அரசும் மற்றும் அயோத்தி ராமர் கோயில் நிர்வாகமும் நிகுஞ்ச் வகாடியா உருவாக்கியுள்ள இப்படைப்பை கோயிலின் கும்பாபிஷேக விழாவில் ஹனுமனுக்கு படைப்பதற்கு அனுமதி அளித்துள்ளது என தெரிவிக்கின்றனர். பல வருடங்களாக நிகுஞ்ச் வகாடியா இந்த மினியேச்சர் புத்தகங்களை உருவாக்குவதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு.. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு!