மத்தியப் பிரதேசம்: ஜபல்பூரை ஒட்டியுள்ள தரம்பூரா கிராமத்தை, ஆசிரியர் ஒருவர் பள்ளியாக மாற்றியுள்ளார். இக்கிராமத்தில் எங்கு திரும்பினாலும் கல்வியைப் பயிற்றுவிக்கும் படங்களும் சூழலும் மட்டுமே தெரியும். இங்கு அமைந்துள்ள ஒவ்வொரு சுவரும், கல்விவை போதிக்கிறது. அப்படி ஒரு மதிக்கத்தக்க பரிசை, அங்குள்ள அரசுப்பள்ளியின் ஆசிரியர் ஒருவர் இக்கிராமத்திற்கு வழங்கியுள்ளார்.
மன உறுதியும், அர்ப்பணிப்பும், வளர்ச்சியும் தான் வெற்றியின் பாதை. இந்த வரிகளுக்கேற்ப ஒரு கிராமத்தையே கல்வி நிரம்பிய இடமாக மாற்றி, தினேஷ் குமார் மிஸ்ரா என்ற ஆசிரியர் வெற்றிகண்டுள்ளார். அதாவது, கிராமத்தில் உள்ள அனைத்து சுவர்களிலும் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஓவியங்களுடன் கொடுத்துள்ளார். சுவர்களும் கல்வி போதிக்குதே என்னும் அளவிற்கு கிராமத்தையே மாற்றியுள்ளார்.
சுவர்களும் கற்பிக்கும்: பொதுவாக, அரசுப் பள்ளியின் பெயரைக் கேட்டாலே, மோசமான அமைப்பு, ஒழுக்கமின்மை, குழந்தைகளை கவனிக்காமல் ஓய்வெடுக்கும் ஆசிரியர்கள் என இதுபோன்ற சிந்தனைகள் தான் மனதில் எழும். இத்தகைய சிந்தனைகளை மாற்றும் வகையில், இந்த ஆசிரியர் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கரோனா காலகட்டத்தில், அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி என்பது ஒரு கேள்விக்குறியாக திகழ்ந்தபோது, அதனை மாற்றி அனைவரும் எளிய முறையிலும், சலிப்பின்றி கல்வி கற்கும் விதமாகவும், இவர் இத்தகைய முயற்சியை செய்துள்ளார். இவரது முயற்சியை அனைவரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
இப்படி ஒரு ஆசிரியர் ஒவ்வொரு பள்ளியிலும் தேவை என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இதுபோன்ற ஆசிரியர்கள் இருந்தால், அரசு பள்ளிகளுக்கு புத்துயிர் உருவாகும் என கிராம மக்கள் கூறுகின்றனர். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஆசிரியர் தினேஷ் குமார் மிஸ்ரா செய்த இந்தப் பணி, குருவின் மாண்பை உயர்த்தியுள்ளது.
இதையும் படிங்க: கழிவறை சுவர்களில் கலைவண்ணம்... வியப்பூட்டிய கர்நாடகா