சிகார்: ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் உள்ள பள்ளியில், ஆசிரியர் மாணவனை கொடூரமாகத் தாக்கியதால், முதுகில் பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக மாணவனும்; அதே நேரத்தில், மாணவன் தன்னை தாக்கியதாக ஆசிரியரும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இதுதொடர்பாக ஆசிரியர் மற்றும் மாணவரின் குடும்பத்தினர் காவல்துறையிடம் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர்.
பள்ளியில் சரியாக வரிசையில் நிற்காததால் பள்ளி மாணவன் ஒருவரை ஆசிரியர் தண்டித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் சண்டையாக மாறியுள்ளது. இதைத் தொடர்ந்து, ஆசிரியர் மாணவனை அறைக்கு அழைத்துச்சென்று, அங்கு அவரை அடித்ததால், எல்லா இடங்களிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பள்ளி சதுக்கத்தில் அனைத்து குழந்தைகள் முன்னிலையில் இரும்புக் குழாயால் தாக்கப்பட்டதாகவும், இதனால் தனது வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் மாணவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பள்ளி ஊழியர்கள் மற்றும் ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் பள்ளியின் ஆசிரியரும் மாணவன் தன்னை தாக்கியதாகப் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: டெல்லியில் பழைய கலால் கொள்கை அமல்.. தனியார் மதுக்கடைகள் மூடல்.. மதுப்பிரியர்கள் அதிருப்தி