டெல்லி: இன்று (ஜன.27) ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் அதிகாரப்பூர்வமாக கைப்பற்றியுள்ளதாக டாடா நிறுவன குழுமத் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “மீண்டும் ஏர் இந்தியாவை டாடா குழுமத்திடம் பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அனைவருக்கும் உலகத் தரம் வாய்ந்த விமான சேவை வழங்க ஆர்வமாகக் காத்திருக்கிறோம். ஏர் இந்தியாவில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களையும் டாடா குழுமம் அன்போடு வரவேற்கிறது. அவர்களோடு இணைந்து செயல்பட ஆவலாக இருக்கிறோம்” எனக் கூறினார்.
முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை ( Department of Investment and Public Asset Management) செயலாளர் டுஹின் கான்ட் கூறுகையில், “அனைத்துக்கட்ட நடவடிக்கைகளும் முடிவடைந்து, ஏர் இந்தியாவில் முதலீடு முற்றிலுமாக முடிக்கப்பட்டு, பங்குகள் அனைத்தும் புதிய ஏர் இந்தியா உரிமையாளர் நிறுவனமான Talace Pvt Ltd-க்கு மாற்றப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'இசை தொழில் அல்ல, ஆத்மார்த்தமான உணர்வு'- கிளாரிநெட் கலைஞர், பத்மஸ்ரீ ஏ.கே.சி. நடராஜன் சிறப்பு பேட்டி!