புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பிப்ரவரி 18ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு சென்று. அவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில்,கடலூர் சாலை அந்தோனியார் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தவளகுப்பம் சந்திப்பு வரை அரசு பேருந்தில் மக்களோடு மக்களாக பயணம் செய்தார் தமிழிசை சவுந்தரராஜன். அப்போது பேருந்துகள், சாலைகள் தரம் குறித்து அவர் ஆய்வு செய்தார்.
தவளகுப்பம் சந்திப்பில் இறங்கி, மற்றொரு அரசு பேருந்தில் ஏறிய அவர், அபிஷேகப்பாக்கம் பகுதி வரை சென்றார். இதுகுறித்து அவர் கூறுகையில் "தேர்தல் முடிந்தவுடன் சாலைகள் அனைத்தும் சரி செய்யப்படும். அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து, அதற்கான திட்டங்கள் தயார் செய்யப்படும்" என்றார்.
இதையும் படிங்க: பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் சாதி சான்றிதழை ஆய்வு செய்யப்படுமா?