புதுச்சேரி: இந்திய திரைப்பட உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த்திற்கு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று (அக்.25) அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டு, ஆதரிக்கப்பட்ட சகோதரர் ரஜினிகாந்த்தின் கலை உலக சாதனையை தமிழ்நாடு மக்களைப் போலவே மத்திய அரசும் அங்கீகரித்திருக்கிறது. சாதனை விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு எனது வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று டெல்லியில் நடைபெற்ற 67ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், இந்தியத் திரையுலகில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்த்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: தேர்தல் அலுவலரை மிரட்டிய விவகாரம்: அதிமுகவை சேர்ந்த 4 பேர் கைது