ETV Bharat / bharat

Heavy Rain damage: ஒன்றிய குழு வருகின்ற 22ஆம் தேதி புதுச்சேரி வருகை

கனமழை பாதிப்புகளை (Heavy Rain damage) மதிப்பிட ஒன்றிய குழுவானது வருகின்ற 22ஆம் தேதி புதுச்சேரி வரவுள்ளது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Nov 21, 2021, 9:53 AM IST

Updated : Nov 21, 2021, 5:51 PM IST

சிறுவர்களுடன் அமர்ந்து உணவருந்திய தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி: கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ஆரியபாளையம் அரசு தொடக்கப் பள்ளி வெள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை நேற்று (நவம்பர் 20) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள முதியவர்களுக்கு அவர் மதிய உணவினை பரிமாறினார். அப்போது சிறுவர்களுக்கான நோட்டு, புத்தகங்கள், எழுது பொருட்கள் ஆகியவற்றையும் வழங்கினார்.

சிறுவர்களுடன் அமர்ந்து உணவருந்திய தமிழிசை

ஒன்றிய குழு வருகை

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தற்போது இருக்கும் பாலம் உயரம் குறைவாக இருப்பதால், புதிய பாலம் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கான திட்ட வரைவு தயாராக இருக்கிறது. இது போன்ற அபாயகரமான சூழல்களைத் தடுக்கும் வகையில் புதிய பாலம் கட்டப்படும்.

பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்கான அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது. ஒன்றிய குழு கனமழை பாதிப்புகளை (Heavy Rain damage) மதிப்பிட வருகின்ற 22ஆம் தேதி புதுச்சேரி வருகிறது. ஒன்றிய குழுவை அழைத்துச் செல்ல மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்திருக்கிறார். நானும், முதலமைச்சரும் ஒன்றிய குழுவை சந்திக்கவுள்ளோம்.

சிறிய காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கடல்சார் பாதுகாப்பு நிறுவன அலுவலர்களைத் தொடர்பு கொண்டு, உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டிருக்கிறோம்.

தொலை நோக்கு திட்டங்கள் குறித்து விவாதம்

நிரந்தரத் தீர்வு ஏற்படுத்துவதற்கு முன்னர், உடனடியாக கற்கள் மற்றும் மணலைக் கொட்டி மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மழைக் காலத்தையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண உதவிகள், ஒன்றிய குழுவிடம் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் குறித்தும் முதலமைச்சருடன் விவாதித்தேன்.

கடல் அரிப்பை தடுக்க ஒன்றிய அமைச்சருடன் பேசியதையும் பகிர்ந்து கொண்டோம். வருங்காலத்தில் கடுமையான மழை வந்தாலும் மக்கள் பாதிப்படையாமல் இருப்பதற்கான தொலைநோக்கு திட்டங்களையும் முதலமைச்சருடன் விவாதித்தேன்” என்றார்.

இதையும் படிங்க: CSK FELICITATION CEREMONY: தோனி சென்னையின் செல்லப்பிள்ளை - மேடையில் தோனி புகழ்பாடிய முதலமைச்சர்

Last Updated : Nov 21, 2021, 5:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.