ETV Bharat / bharat

'புதுச்சேரி வளர்ச்சிக்கு தமிழிசை உறுதுணையாக உள்ளார்' - முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி வளர்ச்சிக்கு தமிழிசை உறுதுணையாக உள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ரங்கசாமி
முதலமைச்சர் ரங்கசாமி
author img

By

Published : Aug 27, 2021, 5:32 PM IST

Updated : Aug 27, 2021, 7:26 PM IST

புதுச்சேரி: சட்டப்பேரவையில் துணை நிலை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் இன்று (ஆக.27) காலை பேரவைத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சென்னை புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவராக இருந்த சாந்தா, புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெயமூர்த்தி, ராஜாராம், அருள்ராஜ் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

துணை நிலை ஆளுநர் உரைக்கு நன்றி

. துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரைக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் ரங்கசாமி, " புதுச்சேரி சரித்திரத்தில் முதல்முறையாக துணை நிலை ஆளுநர் திருக்குறளை கூறி உரையாற்றியது பெருமையாக உள்ளது.

முதலமைச்சர் ரங்கசாமி
முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரியை சிறந்த மாநிலமாக கொண்டுவர துணை நிலை ஆளுநர் ஆர்வமாக உள்ளார். புதுச்சேரி மக்கள் நலனை கருதி அக்கறையுடன் செயல்படுகிறார். புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. இப்போது அதுபோன்று இல்லை. புதுச்சேரி வளர்ச்சிக்கு துணை நிலை ஆளுநர் உறுதுணையாக இருக்கிறார்" என்றார்.

சட்டப்பேரவை கூட்டம் வரும் 30ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என சட்டப்பேரவை தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஓஎம்ஆர் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படாது- எ.வ.வேலு

Last Updated : Aug 27, 2021, 7:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.