பெங்களூரு (கர்நாடகா): இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மகள் ஜெயகல்யாணி கடந்த மார்ச் 7ஆம் தேதி சதீஷ் என்பவரை பெங்களூருவில் காதல் திருமணம் செய்து கொண்டார்.
அதைத்தொடர்ந்து ஜெயகல்யாணி, தனக்கும் தனது கணவர் சதீஷுக்கும் தந்தை சேகர் பாபுவால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அதனால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என பெங்களூரு காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இந்தநிலையில் நேற்று (மார்ச் 9) ஜெயகல்யாணி மற்றும் அவரது கணவர் சதீஷ் இருவரும் கர்நாடக உள்துறை அமைச்சர் ஆரக் ஞானேந்திராவை சந்தித்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அமைச்சர் பாதுகாப்பு வழங்குவதாக அவர்களிடத்தில் உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: அப்பாவால் உயிருக்கு ஆபத்து - காதல் திருமணம் செய்த அமைச்சரின் மகள்!