கூடங்குளம்: இது குறித்து தென்னிந்திய பிராந்திய மின்சாரக்குழு மற்றும் தென் மாநிலங்களிடம் கருத்து தெரிவிக்குமாறு கூறியுள்ளது. கூடங்குளம் அனுமின் நிலையத்தில் 2025 ஆம் ஆண்டு மே மாதம் முதல் மூன்றாம் அலகு பிரிவில் மின் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து நான்காவது அலகு பிரிவில் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மின் உற்பத்தி தொடங்கப்படும். தற்போது தமிழ்நாட்டில் மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளதால் இந்த இரண்டு அலகுகளில் உற்பத்தி செய்யப்படும் 100 சதவீத மின்சாரத்தையும் தமிழ்நாட்டிற்கே வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி, கடந்த ஜூலை மாதம் 11 அன்று மத்திய மின் பகிர்மான தலைமையகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதத்தில், ‘ தமிழ்நாட்டில் மின்சாரத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது 17 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இது வரும் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் 21 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது கூடங்குளத்தின் முதல் இரண்டு அலகுகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 55% மட்டுமே தமிழ்நாட்டிற்கு வழங்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டிருந்தார். கூடங்குளம் அனுமின் நிலையத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழ்நாடு அரசு வழங்கி வருவதாகவும் தெரிவித்து இருந்தார்.
மற்ற மாநிலங்களின் கருத்துக் கேட்பு: தமிழ்நாட்டின் இந்த கோரிக்கைக்கு மற்ற தென்னிந்திய மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் கருத்துக்கள் என்ன என்பதும் முக்கியாமனது. எனவே தெற்கு பிராந்திய மின்பகிர்மான குழு மற்ற மாநிலங்களின் கருத்தை தெரிவிக்குமாறு கூறியுள்ளது.
இதையும் படிங்க:"நாட்டின் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றப்பட வேண்டும்" - வெங்கையா நாயுடு வேண்டுகோள்!