டெல்லி: தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலய திறப்பு விழா ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (மார்ச் 30) இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவில் டெல்லி சென்றடைந்தார். அவருக்கு திமுக எம்.பி.க்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் மோடியை சந்தித்து, திமுக அலுவலக கட்டட திறப்பு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுவிக்க தமிழ்நாடு இல்லத்திலிருந்து புறப்பட்டார். இன்று (மார்ச் 31) மதியம் 1 மணி அளவில் சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிகிறது. அப்போது, நீட், மேகதாது அணை, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளிட்டவை குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்து செல்லும்- உச்ச நீதிமன்றம்