வாரணாசி: காசியின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின்படி இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், டிசம்பர் மாதம் தமிழ் கலாசாரம் மற்றும் நாகரிகத்தை வளர்க்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் லால்பூர் பகுதியின் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ஹஸ்தகலா சங்குல் நவம்பர் 17 முதல் டிசம்பர் 17 வரை, தமிழ் கலாசாரம் தொடர்பான கண்காட்சியைத் தொடங்கி வைப்பார்.
இதுகுறித்து, ஆணையர் கவுஷல் ராஜ் சர்மா கூறியதாவது, 'கார்த்திகை மாதம், நவ., 17 முதல், டிச., 17 வரை, தமிழ் மக்களுக்கு முக்கியமான மாதம். தினமும் தமிழர்கள் தங்களின் வீடுகளில் தீபம் ஏற்றுவது வழக்கம். தமிழ்நாட்டு மக்களுக்கும் காசிக்கும் இடையே ஒரு உணர்வுப்பூர்வமான பந்தம் உள்ளது. இந்நிகழ்ச்சியானது, ஏக் பாரத் ஷ்ரேஸ்தா பாரத் திட்டத்தின்கீழ் நடத்தப்படும்.
உண்மையில், இதற்கிடையில், தமிழ்நாட்டில் இருந்து பல குழுக்கள் வாரணாசிக்கு வருவார்கள். இந்நிகழ்வு இந்திய அரசின் கல்வி அமைச்சின்கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
![வரும் நவம்பர் 17 முதல் வாரணாசியில் தமிழ் விழா ஏற்பாடு - ஆயத்தப்பணிகள் தீவிரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/up-var-4-tamil-mahothav-7200982_19102022154032_1910f_1666174232_397.jpg)
இந்த நிகழ்வின் பின்னணியில் ஒரு கூட்டம் இங்கு நடைபெற்றது. இதில் மத்திய அலுவலர்களும் கலந்து கொண்டனர். காசி வித்யுத் பரிஷத் மற்றும் மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். ஏறக்குறைய திட்டத்தின் முழு வடிவமும் தயாராகிவிட்டது. 2 நாட்கள் தங்கிய பிறகு, இந்த குழுவும் காசியிலிருந்து பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்குச்செல்லும். இது தொடர்பாக தமிழ்நாட்டில் இணையதளம் தொடங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் அரசு செலவில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டின் கலாசாரத்தின் வாரணாசி மற்றும் இந்திய மக்கள் அறிந்துகொள்வர்’ என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் கைத்தறி கைவினைப்பொருட்கள் கண்காட்சி மற்றும் இரு மாநிலங்களின் உணவு வழங்கலும் நடைபெறும்.