கரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தாக்கத்தினால் அனைத்து சுற்றுலாத் தலங்களையும் மூட மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டது.
இதன் காரணமாக மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள தாஜ்மஹால் உள்ளிட்ட 3,700 சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில் கரோனா நோய்த்தொற்று சற்று குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகு இன்று முதல் சுற்றுலா தலங்களை திறக்க மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியது.
அதன் அடிப்படையில் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 650 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும், இதற்கான டிக்கெட்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆங்கில வழிக் கல்வியை அதிகப்படுத்த நடவடிக்கை - அன்பில் மகேஷ் பொய்யாமொழி