ஆந்திரப்பிரதேசம்: ஆந்திர மாநிலத்தில், கடந்த 2019ஆம் ஆண்டு சட்டப்பேரவைத்தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்ற ஜெகன் மோகன் ரெட்டி, தன் தலைமையிலான அமைச்சரவை இரண்டரை ஆண்டுகளில் மாற்றி அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். கரோனா காரணமாக அமைச்சரவை மாற்றம் செய்யப்படாத நிலையில், கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் ஒட்டுமொத்த அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் வழங்கினர். இதில், அமைச்சராக இருந்த கவுதம் ரெட்டி அண்மையில் மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து, 24 அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர்.
சிறப்பாகப் பணியாற்றிய முந்தைய அமைச்சர்கள், புது முகங்கள் அடங்கிய புதிய அமைச்சரவைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், நடிகையும், நகரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான நடிகை ரோஜா உள்பட 25 பேர் புதிய அமைச்சர்களாக இன்று(ஏப்ரல் 11) பதவியேற்றனர். இதற்கிடையே பதவிகிடைக்காத எம்.எல்.ஏக்கள் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்திவருகின்றனர்.
பதவியேற்பு விழா, மாநிலத் தலைநகர் அமராவதி நகரின் வெலகபுடியில் உள்ள தலைமைச்செயலக வளாகத்தில் நடைபெற்றது.
புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் பிஷ்வபூஷன் ஹரிசந்தன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
புதிய அமைச்சர்கள்
- அம்பட்டி ராம்பாபு
- அம்சத் பாஷா
- ஆதிமுலாபு சுரேஷ்
- போட்சா சத்தியநாராயணா
- புடி முத்தியாலா நாயுடு
- புக்கன ராஜேந்திரநாத் ரெட்டி
- வேணுகோபாலகிருஷ்ணன்
- தாடிசெட்டி ராஜா
- தர்மனா பிரசாதராவ்
- குடிவாடா அமர்நாத்
- கும்மனூர் ஜெயராம்
- ஜோகி ரமேஷ்
- கக்கனி கோவர்தன் ரெட்டி
- கருமுரி நாகேஸ்வர ராவ்
- கோட்டு சத்தியநாராயணன்
- களத்தூர் நாராயணசாமி
- உஷாஸ்ரீ சரண்
- மெருகா நாகார்ஜுனா
- பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி
- விஸ்வரூப்
- பீடிக ராஜன்னதோரா
- ஆர்.கே.ரோஜா
- சீதிரிஅப்பலராஜு
- விடடல ரஜினி
- தநேதி வனிதா
இதையும் படிங்க: ஆந்திராவில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா!