மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் திரிணாமுல் அரசுக்கு எதிராக பாஜக தீவிரமாகக் களமிறங்கியுள்ளது.
முக்கிய புள்ளிகள் பலரை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது. தாரகேஸ்வர் தொகுதி வேட்பாளராக பாஜக சார்பில் ஸ்வபன் தாஸ்குப்தா நிறுத்தப்பட்டுள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக ஸ்வபன் தாஸ்குப்தா உள்ள நிலையில், அவர் போட்டியிடுதவது குறித்து திரிணாமுல் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து சர்ச்சையை தவிர்க்கும் விதமாக ஸ்வபன் தாஸ்குப்தா பதவியை ராஜினாமா செய்துள்ளார். திரிணாமுல் சார்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க விருப்பமில்லை எனவும் வேட்புமனு தாக்கலுக்கு முன்னர் அனைத்து விவகாரங்களும் தீர்க்கப்படும் என ஸ்வபன் தாஸ்குப்தா கூறியுள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டமாக நடைபெற்று முடிவுகள் மே 2ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன.
இதையும் படிங்க: போராடும் வங்கி ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் ராகுல் காந்தி