மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். விவசாயிகளிடம், அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், தற்போது வரை எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை.
ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் கலவரத்தை உருவாக்கும் விதமாக, அடையாளம் தெரியாத ஒருவர், விவசாயிகள் நான்கு பேரை கொலை செய்ய ஏவப்பட்டுள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட நபரை விவசாயிகள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். 26ஆம் தேதி நடைபெறும் டிராக்டர் பேரணியில் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தி கவலரம் மேற்கொள்ள தன்னை ஏவியுள்ளதாக அந்நபர் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார். அவரை தொடர்ந்து காவலில் வைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இது விவசாயிகள் போராட்டத்தை முடக்க மேற்கொள்ளப்படும் சதி என விவசாயிகள் தலைவர் குல்வந்த் சிங் சந்து புகார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரேசிலுக்கு பறந்த இந்தியாவில் தயாரான தடுப்பூசிகள்