குரங்கம்மையை உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. மொத்தமாக 75 நாடுகளில் 16,000-க்கும் மேற்பட்ட குரங்கம்மை பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் அதிகம் பதிவாகிவருகிறது. இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு முதலாவதாக ஜூலை 14ஆம் தேதி கேரளாவில் பதிவானது.
இதையடுத்து, கேரளாவில் மேலும் 2 பேருக்கும், டெல்லியில் ஒருவருக்கும் குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய குருவாயூரை சேர்ந்த 22 வயதுடைய நபருக்கு குரங்கம்மை அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து கடந்து 27 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இளைஞரின் மாதிரிகள் ஆலபுழாவில் உள்ள தேசிய வைரலாஜி மையத்துக்கு அனுப்பப்பட்டு பரிசோதனை நடைபெற்று வந்த நிலையில், அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கேரள அரசு தெரிவித்துள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: உடலுறவு மூலம் குரங்கம்மை பரவல்… அதிர்ச்சி தகவலும்... மருத்துவ நிபுணர்களின் விளக்கமும்...