ETV Bharat / bharat

கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி! - world health organization

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு குரங்கம்மை நோய்க்கான அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறிகள்

author img

By

Published : Jul 14, 2022, 1:16 PM IST

திருவனந்தபுரம்: உலகம் முழுவதும் இரண்டு மாதங்களுக்கு முன் குரங்கம்மை என்ற நோய்ப் பல நாடுகளில் பரவியது. இது விலங்குகளின் வைரஸால் மனிதனுக்கு பரவிய நோய் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

இதனையடுத்து இந்த நோய் குறித்து பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. குரங்கம்மை நோய் முதலில் 1980ஆம் ஆண்டு பரவியது. இந்நோய் ஒரு அம்மை வகையாகும். இந்நோய்ப் பாதிக்கப்பட்டவரின் வியர்வை மற்றும் உடலில் இருந்து வெளிப்படும் கழிவுகளால் பரவுகிறது. நோய்ப் பாதிக்கப்பட்டவருடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு நோய் வேகமாகப் பரவும்.

முன்னதாக அமெரிக்காவில் 70 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதியானது. மேலும் 2003இல் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் குரங்கம்மை நோய்த்தொற்று ஏற்பட்டது. தற்போது கேரள மாநிலத்தில் ஐக்கிய அரபுகள் நாட்டிலிருந்து வந்தவருக்கு குரங்கம்மை நோய்க்கான அறிகுறிகள் இருப்பதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவரின் மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பின்னரே தொற்று உறுதி செய்யப்படும். இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்நிலையில் அவர் மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:'பாலியல் உறவு மூலமாக குரங்கம்மை வைரஸ் பரவுதா?' - அலெர்ட் செய்த WHO!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.