கொல்கத்தா: கடந்த ஜனவரி 9ஆம் தேதி கொல்கத்தா காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையினரால் குரேஷி (ஐஎஸ் பயங்கரவாதி) என்ற நபரை சந்தேகத்தின் பேரில் மத்தியப் பிரதேசத்தில் இருந்து கைது செய்தனர். மேலும், துப்பறியும் நபர்கள் அவரிடம் நடத்திய விசாரணையில் ஐ.எஸ்.பயங்கரவாதி அப்துல் ரகீப் குரேஷி, போபால் மற்றும் ஜார்க்கண்டில் தனது பயங்கரவாத செயல்களுக்குத் திட்டமிட்டு சந்திப்புகளை நடத்தியது தெரியவந்துள்ளது.
தொடர் விசாரணையில் இதுபோன்ற பல ரகசிய சந்திப்புகளை அவர் நடத்தியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், ஜார்க்கண்ட் மற்றும் பீகாரில் குரேஷி நடத்திய கூட்டத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பல பயங்கரவாத தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஜனவரி 7அன்று ஹவுராவின் டிக்கியாபாராவிலிருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில், கிடர்போர் பகுதியில் ரகசியக் கூட்டத்தில் கலந்து கொள்ளச்சென்ற போது முகமது சதாம் மற்றும் சயீத் அகமது இருவரும் எஸ்டிஎஃப்-ஆல் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் பல முக்கிய ஆவணங்கள், பென் டிரைவ்கள், மடிக்கணினிகள், மொபைல் போன்கள் மற்றும் சிம் கார்டுகள் மீட்கப்பட்டன. பிறகு எஸ்.டி.எஃப் (STF) துப்பறியும் குழுக்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, மற்ற பயங்கரவாதத் தலைவர்களை கண்டுபிடிக்க மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது" என காவல்துறை அறிவித்துள்ளது.
சதாம் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்ததற்கான ஆதாரமாக டைரியையும் போலீசார் மீட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, 2 பேரையும் எஸ்டிஎஃப் காவலில் எடுத்து, தொடர்ந்து விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை விசாரிப்பதன் மூலம் இதுபோன்ற பல்வேறு சோதனைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை தற்போது போலீசார் நடத்தி வருகின்றனர். மேலும் விசாரணையின் போது, நாட்டின் பல மாநிலங்களில் பயங்கரவாத அமைப்பு பற்றிய பல்வேறு தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.