ETV Bharat / bharat

சூரத்தில் ஒரு 'தங்கல்' - டீ வியாபாரியின் 3 மகள்கள் தேசிய சாதனை!

சர்வதேச தந்தையர் தினமான இன்று, சூரத்தில் டீ மற்றும் சிற்றுண்டி வியாபாரம் செய்து வரும் தந்தை, தனது 3 பெண் குழந்தைகளை தேசிய அளவிலான மல்யுத்த வீராங்கனையாக உருவாக்கி உள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சூரத்தில் ஒரு ‘தங்கல்’.. டீ வியாபாரியின் 3 பெண் குழந்தைகளின் தேசிய சாதனை

author img

By

Published : Jun 18, 2023, 3:21 PM IST

சூரத்: குஜராத் மாநிலத்தின் சூரத்தில் உள்ள உதானா பகுதியில் இருக்கும் ஒரு நடைபாதையில் தேநீர் மற்றும் சில சிற்றுண்டிகளை விற்கும் கடை ஒன்று உள்ளது. இந்தக் கடையின் உரிமையாளர், ராம்லகான் ராய்க்வார். சூரத்தின் டிண்டோலியில் வசித்து வரும் இவருக்கு நீலம், சோனோ மற்றும் மோனு ஆகிய 3 பெண் குழந்தைகளும் ஒரு மகனும் உள்ளனர். இவர்களில், 3 பெண் குழந்தைகளும் தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிகளில் சாதனை படைத்து வருகின்றனர்.

இது குறித்து மோனு கூறுகையில், “நான் தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிகளில் விளையாடி உள்ளேன். அது மட்டுமல்லாமல் எனது இரண்டு சகோதரிகளான நீலம் மற்றும் சோனோ ஆகியோரும் மாநில மற்றும் தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிகளில் கலந்து கொண்டு பல தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.

நான் எனது கல்வி அல்லது மல்யுத்த பயணத்தில் பெற்ற அனைத்து சாதனைகளுக்கும் என்னுடைய தந்தைதான் காரணம். நான் எனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு, எனக்கான துறையைத் தேர்வு செய்து அதில் சாதனைப் படைத்ததற்கு என்னுடைய தந்தைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால், நான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து வந்தவள். அங்கு பெண்களுக்கான களம் மறுக்கப்படுகிறது. முக்கியமாக, மல்யுத்தம் என்பதற்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

குறிப்பிட்ட வயதிற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால், எனது தந்தையோ நாங்கள் மூவரும் பட்டப்படிப்பு முடிக்கும் வரையிலும் சரி, அதன் பிறகு நாங்கள் எங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்வு செய்தது வரையிலும் சரி, என்னுடைய தந்தையின் சுதந்திரம் இருந்தது. என்னுடைய அப்பா நடைபாதையில் தேநீர் வியாபாரத்தை இரவு பகலாக செய்து, எங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்துள்ளார்” என தெரிவித்தார்.

அதேபோல், இது குறித்து ராம்லகான் ராய்க்வார் கூறுகையில், “என்னுடைய பெயரை அனைவருக்கும் தெரியப்படுத்தியதால், என்னுடைய மகள்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். நான் முதன் முதலாக உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்தபோது கூலித் தொழிலில் இருந்து எனது வாழ்க்கையைத் தொடங்கினேன்.

பின்னர், அதில் கிடைத்த பணத்தில் இருந்து தேநீர் கடையை வைத்தேன். அந்த வருமானத்தின் மூலம் எனது 3 மகள்களையும் பட்டம் பெற செய்தேன். அப்போது, அவர்களுடைய ஆசிரியர்கள், எனது மகள்கள் விளையாட்டில் திறமையாக இருப்பதாகக் கூறினர். எனவே, அதற்கான ஊக்கத்தை அனைத்து விதங்களிலும் அளிப்பதற்காக தினமும் 12 முதல் 14 மணி நேரம் வேலை பார்த்தேன். எப்போதும் பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகளை விட குறைவானவர்கள் அல்ல. அவர்கள் வளர்வதற்கு நாம் அனுமதிக்க வேண்டும் என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்” என கூறினார்.

மேலும், இவர்களில் நீலம் கடந்த 4 வருடங்களாக மல்யுத்தம் செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல், அவர் குடோ, கால்பந்து ஆகியவற்றையும் விளையாடி வருகிறார். அதேபோல் சோனு கேல் மஹகும்பில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். அது மட்டுமல்லாமல், சகோதரிகள் மூவரும் விடி போதார் என்ற கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Savings Schemes: பெண் குழந்தை பெற்றவரா நீங்கள்? : செல்ல மகளுக்கான சூப்பர் சேவிங் திட்டங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.