ETV Bharat / bharat

தன்பாத் நீதிபதி கொலை- உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை! - கொலை

தன்பாத் நீதிபதி ஆட்டோ மோதி உயிரிழந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையில் இறங்கியுள்ளது.

Supreme Court
Supreme Court
author img

By

Published : Jul 30, 2021, 2:20 PM IST

டெல்லி : ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்ட செசன்ஸ் நீதிபதி உத்தம் ஆனந்த். இவர் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது ஆட்டோ மோதி கொல்லப்பட்டார். இது தொடர்பான காணொலி காட்சி வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட வழக்கின் அத்தனை தகவல்களையும் சமர்பிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற வழக்குரைஞரும் உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவருமான விகாஷ் சிங், “இது தொடர்பாக சிபிஐ (மத்திய புலனாய்வு அமைப்பு) விசாரணை நடத்த வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : தன்பாத் நீதிபதி கொலை- அதிர்ச்சி காணொலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.