ETV Bharat / bharat

பேரறிவாளனை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு - 31 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது..

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 31 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை அரசியல் சட்டத்தின் 142வது பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு - 31 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது.. supreme-court-released-perarivalan-from-rajiv-gandhi-assassination-case ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம் விடுதலையானார் பேரறிவாளன்

author img

By

Published : May 18, 2022, 10:57 AM IST

Updated : May 18, 2022, 12:47 PM IST

டெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் தண்டனை காலம் முடியும் முன்னரே விடுவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நெடுங்காலமாக நடைபெற்று வரும் பேரறிவாளனின் விடுதலை வழக்கில் இன்று (மே 18) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இதற்கு முன்னதாக நடைபெற்ற விசாரணையில் “பேரறிவாளன் 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார். சிறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்த கைதிகளை நாங்கள் விடுவித்துள்ளோம். குற்றத்தின் அளவில் எங்களுக்கு பாகுபாடு இல்லை” என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு - 31 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது..

இந்நிலையில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் சென்ற மே 12 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, அமைச்சரவையின் முடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதா எனவும், கவர்னர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள் எனவும், இந்திய தண்டனை பிரிவு 302 மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் இருக்கிறதா? எனவும் அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பப்பட்டன.

31 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது
31 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது

இதற்கு மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குள் வரும் விசாரணை அமைப்புகளின் வழக்குகளில் மட்டும் மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் எனவும், மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரிக்கும் வழக்குகளில் விடுதலை செய்வது மத்திய அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது எனவும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

பின்னர் தமிழ்நாடு அரசு சார்பில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு கூறிய பின்னரே குழப்பம் தொடங்கியதாக வாதம் முன் வைக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது, அரசியல் சட்டத்தின் 142வது பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை என ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Last Updated : May 18, 2022, 12:47 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.