டெல்லி: தமிழ்நாடு அரசின் அர்ச்சகர் நியமனம் தொடர்பான அரசாணைக்குத் தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில், கோயில்களில் ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர் நியமனம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இது தொடர்பான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, எதற்காக அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
அது மட்டுமல்லாது, ஆகம விதிப்படி பயிற்சி பெற்றவர்களே அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர் எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தமிழ்நாடு அரசின் அர்ச்சகர் நியமன அரசாணைக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ’மக்களும் ஒத்துழைக்க வேண்டும்’ - தமிழகத்தின் முதல் பெண் அர்ச்சகர்களின் வேண்டுகோள்!