ETV Bharat / bharat

குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி

குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என சிறப்பு புலனாய்வு குழு அளித்த அறிக்கைக்கு எதிராக முன்னாள் எம்.பி. ஜாப்ரியின், மனைவி ஜாகியா ஜாப்ரி தொடர்ந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று (ஜூன் 24) தள்ளுபடி செய்தது.

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு
author img

By

Published : Jun 24, 2022, 10:50 AM IST

Updated : Jun 24, 2022, 12:20 PM IST

டெல்லி: 2002-ம் ஆண்டு குஜராத்தில் உள்ள கோத்ரா என்னும் பகுதியில் கரசேவகர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில் 59 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் மதக் கலவரங்கள் மூண்டன. அப்போது, குல்பர்க்கா சொசைட்டி பகுதியில் நடந்த வன்முறை சம்பவத்தில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினர் ஜாப்ரியும் கொல்லப்பட்டார். இதன்பின் ராணுவம் வரவழைக்கப்பட்டு கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து, குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) ஒன்று அமைக்கப்பட்டது. அந்த சிறப்பு விசாரணைக் குழு தனது அறிக்கையை 2012 டிசம்பர் 8ஆம் தேதி தாக்கல் செய்தது.

அதில், அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, காவல் துறையினர் பலர் உள்ளிட்ட 64 பேர் மீது எந்தவிதமான குற்றமும் இல்லை என அறிக்கை அளிக்கப்பட்டது. எஸ்ஐடியின் அறிக்கையை மறு ஆய்வு செய்யக்கோரி முன்னாள் எம்.பி., ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி, அகமதாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும், குஜராத் உயர் நீதிமன்றத்திலும் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ஜாகியா ஜாப்ரி, சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வத் ஆகியோர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது. இந்நிலையில், ஜாப்ரியின் மேல்முறையீட்டு மனு மீது நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று (ஜூன் 24) தீர்ப்பு வழங்கியது. அதில், ஜாப்ரியின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Last Updated : Jun 24, 2022, 12:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.