மேஷம்: சூரியன் மிதுன ராசிக்கு செல்வதென்பது உங்களுக்கு பயன்தரக்கூடிய ஒரு செய்தியாகும். வேலை செய்பவர்களுக்கு தங்கள் தகுதியை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைக்கும். இச்சமயத்தில் உங்கள் தந்தையுடனான பரஸ்பர உறவு நன்றாக இருக்கும். மேலும் தற்போது நீங்கள் எந்த பெரிய முடிவுகளையும் எடுக்கலாம்.
பரிகாரம்: காயத்திரி மந்திரத்தை ஓதவும்.
ரிஷபம்: மிதுன ராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து இம்மாதம் முழுவதும் உங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். கண்கள் தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்படலாம். நீங்கள் சற்று திமிர்பிடித்தவராக நடந்துகொள்வீர்கள்.
பரிகாரம் - தினமும் சூரிய பகவானுக்கு குங்குமத்துடன் தண்ணீரைக் கலந்து காணிக்கையாக செலுத்தி சூரிய நமஷ்காரம் செய்யவும்.
மிதுனம்: மிதுன ராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து இம்மாதம் முழுவதும் எதிலும் நம்பிக்கையுடன் இருப்பீர்கள். இருப்பினும், நீங்கள் ஓரளவு கர்வத்துடன் இருப்பீர்கள். உங்கள் எண்ணங்கள் உங்கள் வாழ்க்கைத்துணையைப் பற்றி இருக்காது. தொழில் பார்ட்னருடன் வாக்குவாதமும் ஏற்படலாம்.
பரிகாரம் - காயத்திரி சாலிசாவை ஓதவும்.
கடகம்: மிதுன ராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து இம்மாதம் முழுவதும் பணம் குவிப்பதிலேயே உங்கள் எண்ணம் இருக்கும். மூதாதையர் சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். நீங்கள் லட்சியவாதியாக இருப்பீர்கள்.
பரிகாரம் - தினமும் தந்தையிடம் ஆசீர்வாதம் வாங்குங்கள்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிப்பதென்பது மிகவும் நல்லது. இம்மாதம் சிம்ம ராசியினர் புகழ்பெற்ற நபர்களுடன் தொடர்பு கொள்வார்கள். நீங்கள் சமூகத்தில் அதிக மரியாதையை பெறுவீர்கள். புதிய நண்பர்களும் கிடைப்பார்கள்.
பரிகாரம் - ஆதித்ய ஹிருதயம் ஸ்தோத்திரத்தை ஓதவும்.
கன்னி: மிதுன ராசிக்குள் சூரியன் நுழைவதில் இருந்து இம்மாதம் முழுவதும் கன்னி ராசியினர் கவனமாக இருக்க வேண்டும். இருப்பினும், இந்த நேரம் வேலை செய்பவர்களுக்கு நன்றாக இருக்கும். வேலையில்லாதவர்கள் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
பரிகாரம் - ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானுக்கு ஜலாபிஷேகம் செய்யுங்கள், வெல்லம் தானம் செய்யுங்கள்.
துலாம்: சூரியன் மிதுன ராசிக்குள் நுழைவதால் உங்கள் பலம் அதிகரிக்கும். இந்த நேரத்தில், நீங்கள் கூடுதல் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் தொழில் சார்ந்த பயணங்களை மேற்கொள்ளலாம். இச்சமயத்தில் தந்தையின் அறிவுரைப்படி செயல்படுவது நல்லது.
பரிகாரம்- சூரிய பகவானுக்கு தினமும் தண்ணீரை காணிக்கையாக செலுத்தி சூரிய நமஷ்காரம் செய்யுங்கள். துர்கா சாலிசாவைப் படியுங்கள்.
விருச்சிகம்: சூரியன் மிதுன ராசிக்கு செல்வதால் உங்களுக்கு கவலைகள் அதிகரிக்கலாம். இச்சமயத்தில் வாகனங்கள் அல்லது எலெக்ட்ரிக் பொருட்களைக் கையாளும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மாமியாரிடம் பேசும்போது கவனமாக இருங்கள்.
பரிகாரம்- சூரிய அஷ்டகம் பாராயணம் செய்வது உங்களுக்கு பயன் தரும்.
தனுசு: மிதுன ராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து இம்மாதம் முழுவதும் சர்ச்சைக்குரிய மாதமாகும். இதனால் உங்கள் வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். சுற்றி இருப்பவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள். தொழில் பார்ட்னர்களுடனான வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.
பரிகாரம் - ஞாயிற்றுக்கிழமை விரதமிருந்து சூரியனை வழிபடவும்.
மகரம்: மிதுன ராசிக்குள் சூரியன் நுழைவதால் இம்மாதம் நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். எதிரியின் பக்கம் பலவீனமாகவே இருக்கும். நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். வேலை செய்பவர்களும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
பரிகாரம் - சூரியனின் பன்னிரெண்டு பெயர்களையும் உச்சரிக்கவும்.
கும்பம்: மிதுன ராசியில் சூரியனின் சஞ்சாரம் என்பது கும்ப ராசிக்காரர்களுக்கு பொதுவான பலன்களையே தரும். இந்த நேரத்தில், கல்வி மற்றும் குழந்தைகள் தொடர்பான கவலைகள் இருக்கலாம். காதலிப்பவர்களுக்கு கூட ஈகோ ஏற்படலாம்.
பரிகாரம் - சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தை உச்சரித்து சூரிய பகவானுக்கு தண்ணீரைக் காணிக்கையாக செலுத்தி சூரிய நமஷ்காரம் செய்யவும்.
மீனம்: மிதுன ராசியில் சூரியனின் சஞ்சாரம் என்பது உங்களுக்கு திருப்திகரமான ஒன்றாகவே இருக்கும். ஆனாலும், நீங்கள் கவலையுடன் இருப்பீர்கள். நீங்கள் பல முக்கியமான வீட்டு வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். தாயாரின் உடல்நிலை மேம்படும். புதிய வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள்.
பரிகாரம் - சூரிய பகவானுக்கு தினமும் தண்ணீரை காணிக்கையாக செலுத்தி சூரிய நமஷ்காரம் செய்யுங்கள்.
இதையும் படிங்க: New Year 2022 Horoscope: அடுத்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ!