புதுடில்லி: 2021ஆம் ஆண்டு டிசம்பர் 8இல் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், விபத்தில் கிடைத்த கருப்பு பெட்டி முக்கிய ஆதாரங்களைக் கொண்டு சம்பவம் குறித்து முப்படை நீதிமன்றத்திம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
விசாரணையின் முதல்கட்ட ஆய்வின்படி, இந்த விபத்திற்கு திடீரென்று ஏற்பட்ட வானிலை மாற்றம் தான் காரணம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விபத்திற்கு இயந்திர கோளாறு, நாசவேலை அல்லது அலட்சியம் போன்றவைகள் காரணம் அல்ல எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் கிடைத்த மீதமுள்ள ஆவணங்களை நீதிமன்றத்தில் பாதுகாப்புப் படை ஒப்படைட்டதாக இந்திய விமானப்படை கடந்த வெள்ளிக்கிழமை(டிச.7) தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா, அவரது ஆயுத ஆலோசகர் பிரிகேடியர், மற்றும் கேப்டன் வருண் சிங் உட்பட 13 பேர் குன்னூரில் இறந்தது கடந்த ஆண்டில் நடந்தேறிய மிகத் துயர சம்பவங்களின் ஒன்றாகும்.
இதையும் படிங்க:பிடிமாடான காளைக்குச் சிறப்பு பரிசா? வேண்டாம்... கெத்துகாட்டிய வீரத்தமிழச்சி