ETV Bharat / bharat

'பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளிக்கு அரணாக நிற்பேன்' - சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி மீது திமுக, திகவைச் சேர்ந்தவர்கள் நடத்தும் தாக்குதல்களை முதலமைச்சர் ஸ்டாலின் தடுத்து நிறுத்தவேண்டும் எனவும்; இல்லையென்றால் தான் அப்பள்ளிக்கு அரணாக இருப்பேன் என்றும் பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ட்வீட் செய்துள்ளார்.

Subramanian Swamy Tweet support on Padma Seshadri school
'பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளிக்கு அரணாக நிற்பேன்' - சு. சுவாமி ட்வீட்
author img

By

Published : May 26, 2021, 4:45 PM IST

டெல்லி: பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி தொடர்பாக ட்வீட் செய்துள்ள சுப்பிரமணியன்சுவாமி, "10ஆயிரம் மாணவர்கள் பயிலும் சென்னையில் உள்ள மரியாதைக்குரிய பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியை கியானி என்ற சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும், பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் நிர்வகித்து வருகின்றனர். அப்பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டார் என்பதற்காக திமுக, திகவைச் சேர்ந்தவர்கள் அப்பள்ளியைத் தாக்கி வருகின்றனர்.

இந்த குண்டர்களை தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தடுத்து நிறுத்தவில்லை என்றால், நான் அப்பள்ளிக்கு அரணாக இருப்பேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக என்னைத் தொடர்பு கொண்டவர்களிடம் தமிழ்நாடு பாஜக என்ன செய்துகொண்டிருக்கிறது எனக் கேட்டேன். கட்சி செயலற்ற நிலையில் இருப்பதாக சிலர் தன்னிடம் தெரிவித்தாக அதனையும் மற்றொரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

Subramanian Swamy Tweet support on Padma Seshadri school
சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

பால சேஷாத்ரி பால பவன் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. இக்குற்றச்சாட்டைத் தொடர்ந்து அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலும், அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் தங்களுக்கும் இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்கள், சாதி ரீதியான தாக்குதல்கள் நடந்ததாக சமூக வலைத்தளங்களில் எழுதி வருகின்றனர்.

பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர், அப்பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்திவரும் சூழலில் சுப்பிரமணியன் சுவாமி ட்வீட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'மோடிக்கும், நிர்மலா சீதாராமனுக்கும் பொருளாதாரம் குறித்த அறிவு கிடையாது' - சுப்பிரமணியன் சுவாமி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.