சீதாபூர்: உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியரை அதே பள்ளியில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நடந்துள்ளது. நேற்று (செப் 23) அந்த பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இடையே இருக்கை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் குர்ந்தீர் சிங், ரோஹித் மவுரியா என்னும் 2 மாணவர்கள் சண்டையிட்டுகொண்டனர். இதுகுறித்து அறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம் சிங் வர்மா, இருவரையும் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவன் குர்ந்தீர் சிங் இன்று (செப். 24) 315 போர் பிஸ்டல் துப்பாக்கியுடன் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரை துரத்தி துரத்தி சுட்டுள்ளார். அதன்பின் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனால் வயிறு, இடுப்பில் பலத்த காயமடைந்த தலைமை ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மாணவனுக்கு துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது என்பது தொடர்பாக அவரது பெற்றோரிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:செம்மண் கடத்துபவரோடு தொடர்பு.. தலைமை காவலர் சஸ்பெண்ட் - குமரி எஸ்பி ஹரிகரன் அதிரடி