பெங்களூரு: பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் காரணமாக அறுவை சிகிச்சைக்கு தாமதமானதால் மருத்துவர் ஒருவர் தனது காரில் இருந்து இறங்கி, 3 கிலோமீட்டர் தூரம் ஓடி மருத்துவமனைக்கு சென்றார். இச்சம்பவம் சென்ற ஆகஸ்ட் 30ஆம் தேதி நடந்தது. தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் கோவிந்த் நந்தகுமார், லேப்ராஸ்கோபிக் பித்தப்பை அறுவை சிகிச்சை செய்வதற்காக சர்ஜாபூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். மருத்துவமனை அருகே நெருங்கும் போது போக்குவரத்து நெரிசலில் சிக்கினார். தாமதமானதால் கூகுள் மேப்பில் சரிபார்த்த போது மருத்துவமனைக்கு செல்ல 45 நிமிடங்கள் ஆகும் என்று காட்டியதால் மருத்துவமனைக்கு ஓடி சென்றார்.
இதுகுறித்து டாக்டர் கோவிந்த நந்தகுமார் கூறுகையில், "ஆகஸ்ட் 30ம் தேதி போக்குவரத்து நெரிசலில் சிக்கி, அறுவை சிகிச்சை தாமதமாகிவிடுமோ என்ற கவலையில், வேறு வழியின்றி, கூகுள் Maps உதவியுடன் மருத்துவமனைக்கு செல்ல முடிவு செய்தேன். நான் காரை விட்டு இறங்கி சர்ஜாபூர் - மாரத்தஹள்ளி வழித்தடத்தில் ஓட முடிவு செய்தேன். நான் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் ஓடுவது எனக்கு எளிதாக இருந்தது. மருத்துவமனைக்கு 3 கிமீ ஓடி சரியான நேரத்தில் சென்றடைந்தேன்"என கூறினார்.
இதையும் படிங்க:சித்து மூஸ் வாலா கொலை வழக்கு... என்ஐஏ பல்வேறு இடங்களில் சோதனை