ETV Bharat / bharat

அதிதீவிர புயலாக மாறிய 'ஹமூன்' - எந்தெந்த மாநிலத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு! - update news in tamil

Cyclonic storm Hamoon intensifying rapidly: வடமேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள 'ஹமூன்' புயல், அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Storm 'Hamoon' intensifying rapidly, IMD issues heavy rain alert in North Eastern states
'ஹமூன்' புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 2:03 PM IST

டெல்லி: 'ஹமூன்' புயல் அதிதீவிர புயலாக வலுப் பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (அக்.24) தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள 'ஹமூன்' புயல், அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • SCS Hamoon intensified into VSCS about 290 km east of Paradip (Odisha), 270 km southeast of Digha (West Bengal), 230 km south-southwest of Khepupara (Bangladesh). Likely to weaken and cross Bangladesh's coast between Khepupara and Chittagong around the evening of 25th Oct as CS. pic.twitter.com/6moaRNxqwZ

    — India Meteorological Department (@Indiametdept) October 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த புயலுக்கு 'ஹமூன்' என்ற பெயர் ஈரானால் வைக்கப்பட்டுள்ளது. மேலும், 'ஹமூன்' என்பது பாரசீக வார்த்தையாகும். இது ஈரானில் உள்ள பாலைவன ஏரிகளைக் குறிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

'ஹமூன்' புயல் அதிதீவிர புயலாக மாறி, பின் வடகிழக்கு நோக்கி நகரும்போது வலுவிழந்து, நாளை (அக்.25) அதிகாலை வங்காளதேசம் டிங்கோனா, தீவு-சந்திவிப் இடையே கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் 65-75 கி.மீ இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் வரும் 27ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தேஜ் புயலை தொடர்ந்து வங்கக்கடலில் உருவான ஹமூன் புயல்! வடகிழக்கு மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வானிலை மையம்!

'ஹமூன்' புயல் காரணமாக வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேகாலயா மற்றும் தெற்கு அசாம் உள்ளிட்ட பகுதிகளில் அக்டோபர் 24 முதல் 26 வரை கனமழை பொழிய வாய்ப்பு உள்ளதாகவும், மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளில் அக்டோபர் 25ஆம் தேதி அதிகனமழை பொழிய வாய்ப்பு உள்ளது எனவும், அக்டோபர் 26ஆம் தேதியிலிருந்து மழை படிப்படியாகக் குறையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'ஹமூன்' புயல் காரணமாக தென் கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக் கடல், ஒடிசா, மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சட்டென்று மாறுது வானிலை!... சென்னையை குளிர்வித்த மழை! பொது மக்கள் மகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.