உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு மதரஸா அலியாவில் (அரசு ஓரியண்டல் கல்லூரி) இருந்து திருடப்பட்ட புத்தகங்கள் ஜவஹர் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் நிர்வாகி அசம்கானை காவல் துறையினர் கைது செய்து, நடத்திய விசாரணையில் இந்தப் புத்தகங்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கடந்த 2019ஆம் ஆண்டு மதரஸா அலியாவின் புத்தகங்கள் திருடப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சில நாட்களுக்குப் பின்னர், சுமார் 2500 புத்தகங்கள் மீட்கப்பட்டன.
தற்போது வழக்கு ஒன்றில் சமாஜ்வாதி கட்சியைச்சேர்ந்த ஆசம் கானின் மகன் அப்துல்லா மற்றும் ஆசமின் நண்பர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையின்போது, மீதமுள்ள புத்தகங்களும் ஜவஹர் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. தற்போது அங்கு பல சாக்கு முழுக்க புத்தகங்கள் கிடைத்துள்ளன. கிடைத்த புத்தகங்கள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த புத்தகங்கள் கட்டுமானப்பணி நடந்து வரும் ஒரு லிப்ஃட்டில் வைத்து சுவர் அமைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பல தீவிரமான வழக்குகள் வெளிச்சத்திற்கு வந்தன, அதன்கீழ் நகராட்சியின் துப்புரவு இயந்திரம் ஜவஹர் பல்கலைக்கழகத்தில் இருந்து முந்தைய நாள் மீட்கப்பட்டது. இந்த நிலையில், இன்றும் மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மதரஸா அலியாவின் முதல்வர் சுபைர் அகமது கூறுகையில், 'இந்தப்புத்தகங்கள் மதர்சா அலியாவுக்கு சொந்தமானது. இந்த மதரஸா பல்கலைக்கழகம் 1774இல் ராம்பூர் நவாப்பால் நிறுவப்பட்டது. இது அரசு ஓரியண்டல் கல்லூரி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தப் புத்தகங்கள் அதன் நூலகத்தில் இருந்து 2016ஆம் ஆண்டு திருடப்பட்டது. இந்த வழக்கில் 2019ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2016ஆம் ஆண்டு ஓரியண்டல் கல்லூரியின் கட்டடம் அப்போது அமைச்சராக இருந்த அசம் கான் என்பவரால் ஆக்கிரமிக்கப்பட்டது’ என்று கூறினார். அதன் பின்னர் சுமார் 10,000 மதரஸா புத்தகங்கள் காணாமல் போனதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:மாவோயிஸ்ட்கள் தங்களின் தளங்களை அஸ்ஸாம் மாநிலப்பகுதிகளுக்கு மாற்றமுயற்சி - என்ஐஏ