ETV Bharat / bharat

பட்டாசுகளை விற்றாலோ, வெடித்தாலோ நடவடிக்கை: டெல்லி காவல் ஆணையர்

டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதால், இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி காவல்துறை ஆணையர் எஸ்.என். ஸ்ரீவஸ்தாவா எச்சரித்துள்ளார்.

Strict action follows the use and sale of firecrackers : Delhi Police Commissioner

author img

By

Published : Nov 11, 2020, 11:26 AM IST

டெல்லி: கடுமையான காற்று மாசுபாடு காரணமாக தீபாவளி சமயத்தில், டெல்லியில் பட்டாசுகள் வெடிப்பதற்கு வரும் 30ஆம் தேதி வரை தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.

இதுகுறித்து பேசிய டெல்லி காவல்துறை ஆணையர் எஸ்.என். ஸ்ரீவஸ்தாவா, "டெல்லியில் காற்று மாசினைக் குறைக்க பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காற்று மாசுபாட்டினைக் கட்டுப்படுத்தும் நோக்கிலே பட்டாசுகளை வெடிக்கவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்காணிக்க காவல்துறையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வரும் பகுதிகளை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பர்.

பசுமை தீர்பாயத்தின் உத்தரவினை அடுத்து, பட்டாசு விற்பனை செய்வதற்காக வணிகர்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புதல்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. வரும் 30ஆம் தேதிவரை மக்கள் பட்டாசுகளை விற்பனை செய்யவோ, வெடிக்கவோ கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரவினை மீறி செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தடையை மீறி பட்டாசு விற்பனை செய்பவர்கள் மீதும், பட்டாசு வெடிப்பவர்கள் மீதும் மக்கள் தயக்கமின்றி காவல்துறையினரிடம் புகாரளிக்கலாம். காற்று மாசினைத் தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட 112 பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன" என்றார்.

முன்னதாக, காற்று மாசு அதிகம் உள்ள டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்பாயம் வலியுறுத்தியிருந்தது.

இதையும் படிங்க: காற்று மாசு உள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.