ஜோத்பூர்(ராஜஸ்தான்): கடந்த 1998ஆம் ஆண்டு, படப்பிடிப்பிற்காக ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் சென்ற பிரபல நடிகர் சல்மான்கான், கன்கானி என்ற கிராமத்தில் இரண்டு அரிய வகை மான்களை வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் சல்மான் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கன்கானி கிராமத்தில் அந்த மான்களுக்கு நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. கன்கானி கிராமத்தில் மான்கள் புதைக்கப்பட்ட அதே இடத்தில் நினைவிடம் அமைக்கப்படுகிறது. இதில் உயிரிழந்த கிருஷ்ணா, சிங்காரா என்ற இரண்டு மான்களின் சிலையும் நிறுவப்படவுள்ளது.
இரு சிலைகளும் வடிவமைக்கப்பட்டு தயாராக உள்ளதாகவும், அடுத்த 20 நாட்களில் சிலைகள் நிறுவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மான்கள் வேட்டையாடப்படுவதைத் தடுக்கவும், இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நினைவிடம் அமைக்கப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:டோல்கேட் ஊழியரை காரோடு இழுத்து சென்று தாக்குதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி