ETV Bharat / bharat

கர்நாடகாவில் பொதுத்தேர்வு எழுதாத 20,000 மாணவிகள்! - ஹிஜாப் தடை காரணமா?

கர்நாடகாவில் நேற்று தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 20,994 மாணவர்கள் எழுதவரவில்லை. இதற்குப் பல்வேறுப்பட்ட காரணங்கள் கூறப்படுகின்றன. இந்நிலையில் ஹிஜாப் அணிந்து வந்த தேர்வு கண்காணிப்பாளர் ஒருவருக்கு தேர்வறைக்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிகழ்வும் அங்கு அரங்கேறியுள்ளது.

கர்நாடகாவில் பொதுத்தேர்வு எழுதாத 20,000 மாணவிகள்!- ஹிஜாப் தடை காரணமா?

author img

By

Published : Mar 29, 2022, 4:43 PM IST

பெங்களூரு( கர்நாடகா): கர்நாடகா மாநிலத்தில் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. ஹிஜாப் பிரச்னையால் பல்வேறு தடைகளுக்குப் பிறகு இந்த தேர்வு நடைபெற்றது.

நேற்று (மார்ச் 28) தேர்விற்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்குத் தேர்வு அறைக்குள் அனுமதி மறுக்கப்பட்டது. முதல்தாள் தேர்விற்கு 20 ஆயிரத்து 994 மாணவிகள் தேர்வு எழுதவரவில்லை. கர்நாடகாவில் மொத்தம் 8,69,399 மாணவர்கள் தேர்விற்குப் பதிவு செய்திருந்தனர்.

இருப்பினும் நேற்று முதல் மொழித்தேர்வினை 8,48,405 மாணவர்கள் மட்டுமே எழுதியுள்ளனர். இதற்கு முன்னதாக கர்நாடக கல்வித்துறை தேர்வு எழுத வரும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால் அனுமதி கிடையாது என அறிவித்து இருந்தது. இதனையடுத்து தேர்விற்கு வந்த ஒரு சில மாணவிகள் புர்கா மற்றும் ஹிஜாப் அணிந்து வந்திருந்தினர். அவர்களுக்கு உடை மாற்றத்தனி அறை வழங்கப்பட்டிருந்தது. எந்த மாணவர்களும் எந்த ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபடவில்லை. யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வுப் பணியாளர் பணியிடை நீக்கம்: பெங்களூரு சிவநகராவில் அமைந்துள்ள சித்தகானா பள்ளியில் தேர்வின் மேற்பார்வையாளர் ஒருவர் ஹிஜாப் அணிந்து வந்திருந்தார். அப்பெண் 10.30 மணி வரை ஹிஜாப்பை அகற்றாமல் பள்ளியின் அலுவலர்களிடம் வாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஹிஜாபில் வந்த மாணவிக்கு அனுமதி மறுப்பு: ஹப்பலியில் உள்ள சாந்தி நிகேதன் தேர்வு மையத்தில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவி வீட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டார். சர்தார் மெகபூபா அலிகான் என்ற மாணவி ஹிஜாப் அணிந்து வந்ததால் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார். பின்னர் அவர் சீருடை அணிந்து வந்த பின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படிங்க:பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்த திருச்சி சிவா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.