அமராவதி (ஆந்திரா): திருப்பதியில் கரோனா அலை காரணமாக இரண்டு ஆண்டுகளாக தரிசனத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கரோனா தொற்று குறைந்து காணப்படுவதால் சென்ற மாதம் முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் சேவையும் தொடங்கப்பட்டது.
திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் கரோனாவிற்கு முன்பே முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. கரோனவால் இரண்டு ஆண்டுகள் தடைபட்ட சிறப்பு சலுகையை வழங்க இருப்பதாக தேவஸ்தானம் தகவல் அளித்துள்ளது. அதன்படி இன்று (ஏப்ரல் 1) முதல் இதற்கான டோக்கன் வழங்கப்பட்டது.
ஒரு நாளில் 1000 டோக்கன் வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் தேவஸ்தான அலுவலகத்தில் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 3 மணிக்கும், மற்ற நாள்களான ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 10 மணிக்கும் டோக்கன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் டோக்கன் எப்போது வரும் என்பதை திருப்பதி தேவஸ்தானம் பின்னர் தெரிவிக்கும் எனத் தகவல் கூறியுள்ளது.
இதையும் படிங்க:திருப்பதி பக்தர்களுக்கு நற்செய்தி: இன்று முதல் இலவச டிக்கெட்டுகள் விற்பனை